Seed Certification
விதை நேர்த்தி :: பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாணக்கொல்லி

பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாணக் கொல்லி விதை நேர்த்தி
விதை நேர்த்தி என்பது பொருள்கள் மற்றும் அதன் செயல்முறைகள் இரண்டையும் குறிக்கும். சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விதைகள், நாற்றுக்கள் மற்றும் சில செடிகள் போன்றவற்றின் வளர்ச்சி சூழ்நிலையில் மேம்படுத்தப்படும்.விதை நேர்த்தியானது அடிப்படையான முறையான முலாம் பூசுதல் முதல் உருளைகள் செய்வது வரையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விதை முலாம்  பூசுதல்
இது அதிகப்படியாக விதை நேர்த்தி செய்யப்படும் முறையாகும். விதைகளை உலர்ந்த (அ) ஈரமானப் பொடிகளை கலவை (அ) திரவங்களில் கலந்து முலாம் பூசுதல் ஆகும். முலாம் பூசுதல் பண்ணையிலோ, ஆலைகளிலோ செய்யலாம். மண்பானை இதற்கு உபயோகப்படுத்தலாம். பூச்சிக்கொல்லிகளை விதையுடன் மண்பானையில் கலக்கலாம் (அ) விதைகளை ஒரு பாலித்தீன் விரிப்பின் மேல் பரவச்செய்து தேவையான பூச்சிக்கொல்லியை அதன் மேல் தூவி கைகளால் கலக்கி விடலாம்.

விதை உறை போல் முலாம் பூசுதல்
மேற்கூறிய முறையிலேயே விதைகளின் மேல் இராசயனம் ஒட்டும் திறன் அதிகரிக்க ஒரு சிறப்பு இணைப்பொருளை உபயோகிப்பது இம்முறையாகும். இதற்கு மேம்படுத்தப்பட்ட நேர்த்தி முறைகள் ஆலைகளில் கையாளப்படவேண்டும்.

விதை உருளைகள்
மிகவும் நவீன விதை நேர்த்தி முறையான இது விதையின் புறத் தோற்றத்தை மாற்றி விதையை உருளைகள் (Pellets) போன்று அமைப்பு பெறுவதற்கு, வசதியாக கையாள்வதற்கும் உதவுகிறது. உருளைகள் ஆக மாற்றுவதற்கு சிறப்பு நவீன சாதனங்கள் தேவைப்படும். மேலும் இம்முறை விதை நேர்த்தியின் செலவு மிக அதிகமாகும்.

பல்வேறு பயிர்களின் விதை நேர்த்தி பரிந்துரைகள்

வ. எண்

பயிர் பெயர்

நோய் / பூச்சி தாக்குதல்

விதை நேர்த்தி

1.
2.

கரும்பு
சூரியகாந்தி

வேர் அழுகல், வாடல்
விதை  அழுகல்

கார்பென்டாசிம் (0.1 சதவிகிதம்) ட்ரைக்கோடெர்மா / 4-6 கி / கிலோ விதை 
ட்ரைக்கோடெர்மா விரிடே @ 6  கிராம் / கிலோ விதை

பயறு வகைகள்

3.
4.

துவரை
பட்டாணி

வாடல் கருகல் மற்றும் வேர் அழுகல்
வேர் அழுகல்

ட்ரைக்கோடெர்மா @ 4  கிராம் / கிலோ விதை
பேசில்லஸ் சப்டிலிஸ்மற்றும் ஸ்யூடோமோனாஸ் ப்ளுரெசன்ஸ் ஆகியவற்றில் விதை நேர்த்தி செய்வது மற்றும் மண் மூலம் இடுதல் @ 100  கிலோ 2.5 - 4 கிலோ

தானிய வகைகள்

5.

நெல்

வேர் அழுகல் நோய்
மற்ற பூச்சிகள்

ட்ரைக்கோடெர்மா / (5-10 கிராம் / கிலோ விதை) (நாற்றுக்கள் நடும் முன்)
க்ளோரோபைரிபாஸ்/3 கிராம் / கிலோ & ஸ்யூடோமோனாஸ் / 0.5 % டபிள்யூ. பி. 10 கி / கிலோ

6.

கோதுமை

கரையான்

விதைக்கும் முன் ஏதேனும் பூச்சிக்கொல்லியுடன் நேர்த்தி செய்யவேண்டும்.

7.

வால் கோதுமை

உதிரிபரிப்பூட்டை, சூழ்ந்த கரிப்பூட்டை, இலைக்கீற்று, கரையான்

கார்பாக்ஸின் 75 சதவிகிதம்
திரம் 75 சதவிகிதம் WP @ 1.5-1.87 கிராம் 1 /  கிலோ விதை

Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam